கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே உள்ள குற்றியார் மலைகிராமத்தில், நேற்றிரவு மின்சாரம் தடைபட்டது. இதனால் கிராமத்து இளைஞர்கள் அந்தப் பகுதிக்கு மின்சாரம் வழங்கும் பேச்சிபாறையை அடுத்த ஸீரோபாயிண்ட் (Zero Point) பகுதிக்குச் சென்று அங்குள்ள மின் மாற்றியில் கம்பால் தட்டி தங்கள் கிராமத்திற்கு மின்சார இணைப்பு கிடைக்க முயற்சி செய்துள்ளனர்.
மழைக்காலம் என்பதால் கம்பு ஈரமாக இருந்துள்ளது. அதனைக் கவனிக்காமல் இளைஞர்கள் தட்டவே, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே சஜின் சலோ, சுபாஷ், மன்மதன் ஆகிய மூவரும் உயிரிழந்தனர்.