மின்சார சட்டம் 2020, மின் வாரியத்தை தனியாருக்கு விற்பது போன்று உள்ளதால் மின்வாரிய ஊழியர்கள் பெருமளவில் பாதிப்படைவார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனைக் கண்டித்து கன்னியாகுமரி மாவட்டம் பார்வதிபுரத்தில் மின்வாரிய அலுவலகத்தில் தமிழ்நாடு மின்கழக ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் இன்று(பிப்.3) ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.