தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தகாத வார்த்தையால் திட்டிய எலக்ட்ரீசியனை கொன்ற கட்டுமான தொழிலாளி! - கன்னியாகுமரியில் கொலை

கன்னியாகுமரி: மதுபோதையில் அண்ணன், அண்ணியை அவதூறாகப் பேசிய எலக்ட்ரீசியனை கட்டுமான தொழிலாளி வெட்டிக்கொலை செய்தார்.

electrician-murdered
electrician-murdered

By

Published : Nov 14, 2020, 7:57 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம், வைராக்குடியிருப்பில் வசித்துவந்தவர் ரகுராஜன் (55). எலக்ட்ரீசியன் வேலை பார்த்துவந்த இவருக்கும் எதிர் வீட்டில் உள்ள ராஜா என்பவரது குடும்பத்தாருக்கும் முன்விரோதம் இருந்துவந்துள்ளது.

இதனிடையே, ரகுராஜன் நேற்று (நவ. 13) இரவு மது அருந்திவிட்டு, ராஜாவின் அண்ணன், அண்ணியை தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று (நவ. 14) ராஜா மதுபோதையில், ரகுராஜனின் வீட்டிற்குள் புகுந்து, அவரைக் கத்தியால் சரமாரியாகத் தாக்கியுள்ளார்.

அதில் ரகுராஜன் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்துவந்த காவல் துறையினர், உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அதையடுத்து ராஜா கைதுசெய்யப்பட்டார்.

இதையும் படிங்க:சவுகார்பேட்டையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் படுகொலை...!

ABOUT THE AUTHOR

...view details