தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேர்தல் விதிமீறல்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம்! - ஆலோசனைக் கூட்டம்

கன்னியாகுமரி: பணப்பட்டுவாடாவை தடுப்பது, பரிசுப் பொருட்கள் கொடுப்பதை எவ்வாறு கண்டறிந்து தடுப்பது உள்ளிட்டவை குறித்து நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தேர்தல் விதிமீறல்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம்!

By

Published : Apr 2, 2019, 1:45 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பிரசாந்த் வட நேரே தலைமையில் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத், தேர்தல் கண்காணிப்பாளர் காஜல் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள், பறக்கும் படை அலுவலர்கள், கண்காணிப்பு பிரிவு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மாவட்டத்தில் உள்ள உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் பணப்பட்டுவாடாவை தடுப்பது, பரிசுப் பொருட்கள் கொடுப்பதை எவ்வாறு கண்டறிந்து அதனை பறிமுதல் செய்வது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

மேலும், மாவட்ட எல்லைகளில் உள்ள செக்போஸ்ட்களில் காவலர் எண்ணிக்கையை அதிகரித்து கண்காணிப்பை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

தேர்தல் விதிமீறல்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம்!

ABOUT THE AUTHOR

...view details