தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிக்கியது 15 கிலோ தங்கம்!

கன்னியாகுமரி: தக்கலை அருகே தேர்தல் கண்காணிப்புப் பறக்கும் படையினரின் வாகன சோதனையில், உரிய ஆவணங்களின்றி கொண்டுசெல்லப்பட்ட 15 கிலோ தங்கம் பறிமுதல்செய்யப்பட்டது.

By

Published : Mar 6, 2021, 2:31 PM IST

Updated : Mar 6, 2021, 3:34 PM IST

சிக்கியது 15 கிலோ தங்கம்!
சிக்கியது 15 கிலோ தங்கம்!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே முத்தலக்குறிச்சி பகுதியில் பத்மநாபபுரம் தொகுதி பறக்கும்படை வட்டாட்சியர் சரளகுமாரி தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

15 கிலோ தங்கம்

அப்போது அவ்வழியாக வந்த கேரள பதிவெண் கொண்ட வாகனத்தைச் சோதனையிட்டபோது, 15 கிலோ 55 கிராம் எடை கொண்ட தங்கக் கட்டிகள், தங்க நகைகள் இருந்தது கண்டறியப்பட்டது.

அவற்றிற்கு உரிய ஆவணங்கள் இல்லாத நிலையில், அவற்றைப் பறிமுதல்செய்த பறக்கும் படை அலுவலர்கள், அவற்றை திருவட்டார் வட்டாட்சியர் அஜிதாவிடம் ஒப்படைத்தனர்.

பீமா ஜுவல்லரி

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட வாகன ஓட்டுநர் ஷிபு, அவருடன் இருந்த பாதுகாவலர்
பிரதீப் கோஷி ஆகியோரிடம் அலுவலர்கள் விசாரணை நடத்தினர். இதில், இந்த நகைகள் கேரளாவிலிருந்து நாகர்கோவில் பீமா ஜுவல்லரிக்குக் கொண்டுசென்றதாகக் கூறப்படுகிறது.

பல கோடி மதிப்புடைய தங்கம் எவ்வித ஆவணங்களும் இன்றி கொண்டுசென்ற சம்பவம் அலுவலர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்றுவருகிறது.

Last Updated : Mar 6, 2021, 3:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details