தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குமரியில் தேர்தல் விழிப்புணர்வு கேக் கண்காட்சி - நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித்

நாகர்கோவிலில் பேக்கரி உரிமையாளர்கள் நடத்திய தேர்தல் விழிப்புணர்வு கேக் கண்காட்சியை நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

Election awareness cake exhibition in kanniyakumari
Election awareness cake exhibition in kanniyakumari

By

Published : Mar 25, 2021, 9:50 AM IST

கன்னியாகுமரி:தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலோடு, கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்கள் 100 விழுக்காடு வாக்களிக்க வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒருபகுதியாக நாகர்கோவில், வடசேரி பேருந்து நிலையத்தில் மாவட்ட அனைத்து பேக்கரி உரிமையாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கேக் கண்காட்சியை நடத்தினர். இதனை நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் தொடங்கி வைத்து பார்வையிட்டர். இந்தக் கண்காட்சியை பொதுமக்கள் அதிக அளவில் பார்வையாட்டுச் சென்றனர்.

தேர்தல் விழிப்புணர்வு கேக் கண்காட்சி

தொடர்ந்து, வடசேரி பேருந்து நிலையத்தில் உள்ள பேருந்துகளில் தேர்தல் விழிப்புணர்வு வில்லைகளையும் ஒட்டிச் சென்றனர்.

ABOUT THE AUTHOR

...view details