கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகேயுள்ள காற்றாடி தட்டு பகுதியைச் சேர்ந்தவர் சிவன் (28). இவர் கட்டட வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அர்ச்சனா (24) என்ற பெண்ணுக்கும் கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் நடைபெற்றது. அர்ச்சனாவுக்கு தாய் தந்தை கிடையாது. அவரது மாமா முறை உறவினரான பரமேஸ்வர லிங்கம் என்பவர் அவரை வளர்த்து, பின்னர் சிவனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.
இந்நிலையில், திருமணமனான நாள் முதல் தம்பதிகளிடையே குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது. நேற்று இரவும் தம்பதிகள் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. இன்று காலை சிவன் வழக்கம் போல் வேலைக்குச் சென்று விட்டார். அப்போது, வீட்டில் தனியாக இருந்த அர்ச்சனா மாலையில் திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.