கரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், வழிபாட்டுத் தலங்களில் மக்கள் அதிகளவில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் ஈஸ்டர் திருநாள் மக்கள் கூட்டமின்றி கொண்டாடப்பட்டது. கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளிலிருந்தே பிரார்த்தனை செய்தனர்.
ஈஸ்டர் பண்டிகையையொட்டி இறைச்சி கடைகளில் அதிக கூட்டம் மேலும், ஈஸ்டர் பண்டிகையையொட்டி இறைச்சிக் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகளவு காணப்பட்டது. அதுமட்டுமின்றி, நோய் தொற்றுகளின்றி சுகாதாரமான முறையிலும், சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டும் இறைச்சிகள் விற்பனை செய்யப்படுகிறதா எனவும் அரசு அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், இறைச்சி கடைகளில் தாமரை, வாழை இலைகள் பயன்படுத்தப்பட்டன.
இதையும் படிங்க:கோவையில் இறைச்சி கடைகளுக்கு தடை