கன்னியகுமரி மாவட்டம் வடக்குகரும்பாட்டூர் பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ராஜசேகர்(50). இவரது வீட்டின் முன்பு இன்று(பிப்.12) திடீரென ராட்சத பறவை ஒன்று சிறகில் காயங்களுடன் விழுந்து கிடந்ததை பார்த்துள்ளார். பின்னர், இதுகுறித்து அவர் கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
சிறகில் காயங்களுடன் தரையில் விழுந்த ராட்சத மலை கழுகு மீட்பு! - kanniyakumari latest news
கன்னியாகுமரி: வடக்கு கரும்பாட்டூர் அருகே சிறகில் காயங்களுடன் தரையில் விழுந்த ராட்சத மலை கழுகை தீயணைப்பு படை வீரர்கள் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
![சிறகில் காயங்களுடன் தரையில் விழுந்த ராட்சத மலை கழுகு மீட்பு! Eagle rescued in kanniyakumari](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10597589-14-10597589-1613124991565.jpg)
Eagle rescued in kanniyakumari
இந்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கட சுப்பிரமணியன் தலைமையில் அங்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் மூன்று அடி நீளம் கொண்ட அந்த ராட்சத மலை கழுகினை மீட்டு முதலுதவி அளித்தனர். பின்னர் மலை கழுகு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையும் படிங்க: வாழ்வாதாரத்துக்கு நுரையீரல் போன்றது நீர்நிலைகள் - நீதிமன்றம் கருத்து