தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மீன் வளர்ப்பு உரிமம் தடையால் பாழடைந்த குளங்கள்.. குமரி மக்களின் கோரிக்கை என்ன? - மீனவ கூட்டுறவு சங்கம்

குமரியில் கடந்த சில ஆண்டுகளாக மீன் வளர்க்கும் உரிமம் வழங்க அரசு தடைவிதித்துள்ளதால், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாசன குளங்கள் தூர்வாரப்படாமல் செடி, கொடிகள், பாசிகள் என வளர்ந்து பாழடைந்துள்ளது.

மீன் வளர்க்கும் உரிமம் வழங்க அரசு தடை
மீன் வளர்க்கும் உரிமம் வழங்க அரசு தடை

By

Published : Feb 21, 2023, 12:41 PM IST

மீன் வளர்க்கும் உரிமம் வழங்க அரசு தடைவிதித்துள்ளதால், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாசன குளங்கள் பாழடைந்துள்ளது

கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் கடல் வாழ் மீனவர்களைப் போல உள்நாட்டு மீனவர்கள் மாவட்டம் முழுவதும் உள்ள பாசன குளங்களில் மீன் வளர்த்து வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர். மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாசன குளங்கள் உள்ளன. அதற்கென 25 மீனவ கூட்டுறவு சங்கங்களும் உள்ளன. அரசின் விதிமுறைகளின் படி பொதுப்பணித்துறையினர் குளங்களை இந்த கூட்டுறவு சங்கங்கள் மூலமாக மீன் வளர்ப்பதற்காக குத்தகைக்கு விட்டு வந்தனர்.

இதன் மூலம் மாவட்ட முழுவதும் 50,000 மேற்பட்ட உள்ளூர் மீனவர்கள் வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் இன்று வரை குளங்களில் மீன் வளர்க்க குத்தகைக்கு விடும் உரிமை அரசு ரத்து செய்துள்ளது. தொடர்ந்து குளங்களில் மீன் வளர்க்கும் உரிமம் மீண்டும் வழங்காததால் அப்பகுதி மக்களின் மீன்பிடி தொழில் முடங்கியது.

உள்ளூர் மீனவர்கள் குளங்களில் இறங்கி மீன் வளர்க்கும் போது குளங்களில் உள்ள புல், செடி கொடிகள் பாசிகள் ஆகியவற்றை அகற்றி குளங்களை சுத்தப்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது இந்த தொழில் முடக்கம் ஏற்பட்டுள்ளதால், அனைத்து குளங்களிலும் ஆட்கள் கூட இறங்கி குளிக்க முடியாத அளவிற்கு புதர்கள் மண்டி பாழ்பட்டு இருக்கிறது.

எனவே அரசு இந்த உரிமைகளை வழங்க இனிமேலும் முன்வராவிட்டால் உள்நாட்டு மீனவர்கள் மட்டுமல்ல கடலோர மீனவர்களையும் திரட்டி விரைவில் நாகர்கோவிலில் மிக பெரிய போராட்டங்கள் நடத்தப்படும் என உள்நாட்டு கூட்டுறவு மீனவ சங்கப் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: சிவராத்திரி தீமிதி திருவிழாவில் நடந்த பகீர் சம்பவம்! - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய முதியவர்!

ABOUT THE AUTHOR

...view details