கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக கனமழை பெய்துவருவதால் கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றத்தோடு காணப்படுகிறது. 300-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகு வைத்திருக்கும் மீனவர்கள் கடந்த மூன்று நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல முடியவில்லை. கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால் மீனவர்களின் படகுகள் கடற்கரையோரங்களில் பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
கடல் சீற்றத்தால் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை! - கன்னியாகுமரி மீனவர்கள்
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் சீற்றத்தால் 300-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகு வைத்திருக்கும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலைக்கு அருகே சுற்றுலாப் பயணிகளின் படகு சவாரி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதுடன், சுற்றுலாப் பயணிகள் கடலில் குளிக்கவும் காவல் துறையினரால் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அங்கு வெகுவாக குறைந்து காணப்படுகிறது.