கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அருகே அழிக்கால் மீனவ கிராமத்தில் திடீரென கடல் சீற்றம் ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் புகுந்தததால் மீனவர்கள் அச்சமடைந்தனர்.
ஊருக்குள் புகுந்த கடல் அலை; சுவர் இடிந்து முதியவர் படுகாயம் - தடுப்பு சுவர் விழுந்து
கன்னியாகுமரி: கடல் சீற்றத்தால் அலைகள் தடுப்பு சுவர் மீது மோதியதில், சுவர் விழுந்து படுகாயமடைந்த முதியவர் ஒருவர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடல் அலைகள் வீட்டு தடுப்பு சுவர் மீது பாய்ந்ததால் சுவர் இடிந்து விழுந்தது. இதில் மீனவர் டைமண்ட் (56) என்பவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவின் போது பத்து கோடி ரூபாய் செலவில் கடலரிப்பு தடுப்பு சுவர் கட்டப்படும் என அறிவித்திருந்தார்.
ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தொடர்ந்து இதுபோன்ற துயர சம்பவங்கள் ஏற்படுகிறது என மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனால் உடனடியாக அந்தத் திட்டத்தை செயல்படுத்த பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.