கன்னியாகுமரியில்நெல்,தேங்காய் விவசாயத்திற்க்கு அடுத்தபடியாக முக்கிய விவசாயமான ரப்பர் விவசாயம் சுமார் 25000 ஹெக்டர் பரப்பளவில் நடைபெற்றுவருகிறது. இதில் அரசு ரப்பர்கழகம் மூலம் சுமார் 5 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் பரப்பளவில் ரப்பர் விவசாயம் நடைபெற்றுவருகிறது. இதன் மூலம் நாளொன்றுக்கு 250 டன் ரப்பர் உற்பத்தி நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் கன்னியாகுமரிமாவட்டத்தில் இரண்டு நாட்களாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது குறிப்பாக மேற்குதொடர்ச்சி மலையோர பகுதிகளான கோதையாறு , குற்றியாறு பகுதிகளிலும் குலசேகரம் , கடையாலுமூடு , ஆறுகாணி , ஆலஞ்சோலை , களியல் , அருமனை உள்ளிட்ட பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் இரண்டாவது நாளாக ரப்பர் பால் வடிக்கும் தொழில் பாதிக்கபட்டுள்ளது.