தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குமரியில் ராஜீவ் காந்தி சிலையை உடைக்க முயற்சி.. நடந்தது என்ன? - Kanyakumari congress

கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் சந்திப்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சிலையை உடைக்க முயற்சி செய்த போதை ஆசாமியை பிடித்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குமரியில் ராஜீவ் காந்தி சிலையை உடைக்க முயற்சி.. நடந்தது என்ன?
குமரியில் ராஜீவ் காந்தி சிலையை உடைக்க முயற்சி.. நடந்தது என்ன?

By

Published : Nov 7, 2022, 12:04 PM IST

Updated : Nov 7, 2022, 2:06 PM IST

கன்னியாகுமரி:ஆற்றூர் சந்திப்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சிலையை மாவட்ட அக்கட்சியின் நிர்வாகிகளால் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இந்திய அளவில் ராஜீவ் காந்திக்கு அமைக்கப்பட்ட முதல் சிலை என்று இந்த சிலையை கூறுகின்றனர்.

இந்தநிலையில் போதை ஆசாமி ஒருவர் திடீரென சிலை மீது ஏறி அவரது கையில் இருந்த உருட்டுக்கட்டையால் சிலையை உடைக்க முயற்சித்தார். அதனை அவ்வழியாக சென்ற மக்கள் தடுத்தபோது அவர்களை போதை ஆசாமி தாக்க முயன்றார்.

பின்னர், தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற திருவட்டாறு காவல் நிலைய போலீசார் போதை ஆசாமியை லாவகமாக கீழே இறக்கி விசாரித்தபோது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Last Updated : Nov 7, 2022, 2:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details