தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் குடிநீர் வசதி: திறந்துவைத்த மறைந்த எம்.பி.யின் மகன் - kanniyakumari district news

கன்னியாகுமரி: ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியை மறைந்த எம்.பி. வசந்தகுமாரின் சொந்த செலவில் அவரது மகன் விஜய் வசந்த் திறந்துவைத்தார்.

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் குடிநீர் வசதி
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் குடிநீர் வசதி

By

Published : Oct 19, 2020, 6:00 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று பொதுமக்கள் மறைந்த முன்னாள் எம்.பி. வசந்த குமாரிடம் கோரிக்கைவைத்திருந்தனர்.

அதன்படி அவரும் நிதி ஒதுக்கீடு செய்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்தி தருவதாகத் தெரிவித்திருந்தார். இதற்கிடையில் எம்.பி. வசந்தகுமார் உடல்நலக்குறைவால் காலமானார்.

அந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்ட நிலையில் இன்று (அக். 19) வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார். இதில் திமுக எம்எல்ஏ சுரேஷ்ராஜன், காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: அரசு தொழிற்பயிற்சி நிலைய கட்டடத்தை திறந்து வைத்த முதலமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details