கன்னியாகுமரி அருகே தென்தாமரைகுளம் பகுதியைச் சேர்ந்த கட்டுமான தொழிலாளி அஜித்(19). இவர் தனது தாய் மாமா மகன் வண்டிகுடியிருப்பு பகுதியை சேர்ந்த அர்ஜுன்(16) உடன் சித்திரை திருமகராஜபுரம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல், இவர்களை ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்தனர்.
பட்டப்பகலில் இருவர் ஓட ஓட வெட்டிக்கொலை! - குமரியில் பதற்றம்
கன்னியாகுமரி: சுசீந்திரம் அருகே சித்திரை திரு மகாராஜாபுரத்தில், இரு இளைஞர்களை ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பதற்றம் நிலவி வருகிறது. இதனையடுத்து அதிகளவில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
பின்னர் அங்கிருந்து சக்கர வாகனத்தை போட்டு விட்டு தப்பி சென்றனர். இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது. சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் விசாரணை நடத்தி வருகிறார். தொடர்ந்து சுசீந்திரம் காவல்துறையினர் கொலையாளிகள் விட்டுச்சென்ற இருசக்கர வாகனத்தை கைபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
காவல்துறையினர் கொலைக்கான காரணம் என்ன? கொலையாளிகள் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர். விடுமுறை தினமான இன்று கிரிக்கெட் போட்டியில் இளைஞர்களிடையே ஏற்பட்ட பிரச்னையால் இந்த இரட்டைக் கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என்று அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.