திருவனந்தபுரம் மாவட்டம், வெள்ளத்தான்கரை பகுதியைச் சேர்ந்த சுதீர், பிஜூகுமார் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் நாகர்கோவில் - திருவனந்தபுரம் சாலையில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, தோவாளை பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்பவர் இருசக்கர வாகனம் கட்டுப்பட்டை இழந்து சுதீர் வாகனத்தின் மீது மோதியது.
இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் பலி! - friends
கன்னியாகுமரி: குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே இரு சக்கர வகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் சுதீர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதன்பின் படுகாயமடைந்த பிஜூகுமார் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து களியக்காவிளை காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் சுதீர் தலைகவசம் அணியாததால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.