தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மாணவியை எரித்துக் கொன்றவர்கள் மீது ஈவு, இரக்கம் காட்டக்கூடாது' - பொன்.ராதாகிருஷ்ணன் - don't show sympathy on accused by pon radhakrishnan

குமரி: விழுப்புரத்தில் பத்தாம் வகுப்பு மாணவியை எரித்துக் கொலை செய்தவர்கள் மீது எந்த இரக்கமும் காட்டாமல் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்
முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்

By

Published : May 12, 2020, 4:37 PM IST

முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இன்று மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து, கரோனாவால் பாதிக்கப்பட்டப் பகுதியில் உள்ள மக்களுக்கு செய்யப்படும் நிவாரண உதவிகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர், கேரள எல்லையை ஒட்டியுள்ள விரிகோடு பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட மக்கள் வங்கிகளில் பணம் எடுக்க முடியாத சூழ்நிலை உள்ளதால், அந்தப் பகுதியில் நடமாடும் ஏடிஎம் மையங்களை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற ஆட்சியரிடம் கேட்டுக்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பொன்.ராதாகிருஷ்ணன், "விழுப்புரத்தில் பத்தாம் வகுப்பு மாணவி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மனிதனாகப் பிறப்பதற்கு தகுதியற்றவர்கள். அவர்கள் மீது எந்தவித ஈவு, இரக்கமும் காட்டாமல் கடும் நடவடிக்கை எடுத்து, உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்.

ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளதால், சொந்த மாநிலங்களுக்குச் செல்ல முடியாமல் தவிக்கும் மக்களுக்குப் பயனுள்ளதாக அமையும்" எனக் கூறினார்.

முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பு

இதையும் பார்க்க: சிறுமி ஜெயஸ்ரீ எரித்து கொலை: அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்!

ABOUT THE AUTHOR

...view details