தமிழ் திரை உலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பல வருடங்களாக அரசியலுக்கு வருவேன் புதிய கட்சி ஆரம்பிப்பேன் எனக் கூறி வந்த நிலையில், வரும் ஜனவரியில் புதிய கட்சி ஆரம்பிக்க உள்ளதாக சமீபத்தில் அறிவித்திருந்தார்.
இதனால் ரஜினி மக்கள் மன்றம் நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.
ரஜினி பிறந்தநாளையொட்டி சிறப்பு யாகம் நடக்கும் காட்சி இந்நிலையில் வரும் 12ஆம் தேதி ரஜினியின் 71ஆவது பிறந்தநாள் வருகிறது. இதனையொட்டி குமரி மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பாக கன்னியாகுமரி அருகே பஞ்சலிங்கபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீராகவேந்திரா கோயிலில் சிறப்பு பூஜைகள், யாகங்கள் நடத்தப்பட்டன.
மேலும் அன்னதானமும் வழங்கப்பட்டது. இதில் குமரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:'பிறந்த நாளன்று வீட்டுக்கு வர வேண்டாம்'- ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள்!