தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குமரியில் இறந்து கரை ஒதுங்கிய டால்பின் - அரிய வகை டால்பின்

குமரி : ரஸ்தாகாடு கடற்கரைப் பகுதியில் அரிய வகை டால்பின் ஒன்று இறந்து கரை ஒதுங்கியுள்ளது.

Dolphin dies in kanniyakumari
Dolphin dies in kanniyakumari

By

Published : Nov 11, 2020, 5:40 PM IST

கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமம் அருகே உள்ள ரஸ்தாகாடு கடற்கரைப் பகுதியில் டால்பின் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கிக் காணப்பட்டது. இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

இந்தத் தகவலின் பேரில் விரைந்த வனத்துறை அலுவலர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து டால்பினைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். அதைத்தொடர்ந்து டால்பினை அவர்கள் அடக்கம் செய்தனர்.

இது குறித்து வனக்காப்பாளர் பிரபாகர் கூறுகையில், “இது ஒரு அரிய வகை டால்பின். சுமார் ஐந்து கிலோவுக்கு மேல் எடை கொண்ட இந்த மீன், இந்தோ-பசிபிக் கடல் பகுதியில் வசிக்கக்கூடியது. இந்தோ-பசிபிக் பாட்டில் நோஸ் என்று இது அழைக்கப்படுகிறது.

அந்தமான் நிகோபார் தீவுகள் பகுதிகளிலும் இந்த மீன் வசிக்கக் கூடியது. மேலும் ரஸ்தாகாடு கடற்கரைப் பகுதியும் இந்தோ-பசிபிக் கடல் பகுதியைச் சார்ந்ததால், இங்கே வழி தவறி வந்த இந்த டால்பின் இறந்து கரை ஒதுங்கி இருக்கலாம்“ என அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:உயிரிழக்கும் கடல்வாழ் உயிரினங்கள் : அலட்சியம் காட்டும் வனத்துறை

ABOUT THE AUTHOR

...view details