குமரி மாவட்டம், நாகர்கோவிலில் அடுத்த ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டாக்டர்கள் தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. இதில் முதற்கட்டமாக நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் ரத்த தானம் செய்தனர். இதனைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு ரத்த தானம் செய்வது குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
"மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு ரத்த தானம்" - நாகர்கோவில்
கன்னியாகுமரி: மருத்துவர் தினத்தை முன்னிட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருத்துவர்கள் ரத்த தானம் செய்தனர்.
மருத்தவர்கள் தினத்தை முன்னிட்டு மருத்துவர்கள் ரத்த தானம்
இதில் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜிநாதன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பாக சேவையாற்றிய மருத்துவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.