கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியக் கூட்டம் தலைவர் அழகேசன் தலைமையில் இன்று (பிப். 10) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், துணை தலைவர் சண்முகவடிவு, கவுன்சிலர்கள் ஆரோக்கிய சவுமியா, பிரேமலதா, பால்தங்கம், ராஜேஷ், அருண்காந்த் உள்பட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டம் தொடங்கியதும் திமுக கவுன்சிலர் ஆரோக்கிய சவுமியா நிறுத்துங்கள் எனக் கூறி தலைவர், அலுவலர்கள் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். போராட்டத்தின்போது ஆரோக்கிய சவுமியா கூறுகையில், "இதுவரை நடந்த கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை.
தனது கவுன்சில் பகுதி புறக்கணிக்கபடுகிறது. ஊராட்சி பகுதியில் நடக்கும் பணிகள் யாருக்கும் தெரியபடுத்துவது இல்லை. எனவே தமிழ்நாடு அரசை கண்டிக்கிறோம் என்று கோஷமிட்டபடி சுமார் ஒருமணி நேரமாக தர்ணாவில் ஈடுபட்டார்.
அப்போது, மற்ற திமுக கவுன்சிலர்களான பிரேமலதா, அருண்காந்த் ஆகிய இருவரும் ஆரோக்கிய சவுமியாவுக்கு ஆதரவு தெரிவிக்காமல் வேடிக்கை பார்த்தனர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. திமுக பெண் கவுன்சிலர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டது.
இதையும் படிங்க:சேர்ந்து வாழக்கோரி கணவர் வீட்டு முன்பு மகனுடன் பெண் தர்ணா!