கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகரப் பகுதிகளில் அமைந்துள்ள சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் அதில் பயணிக்கும் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இதனால், பழுதடைந்துள்ள சாலைகளை சரி செய்ய பல்வேறு அரசியல் கட்சியினரும் அமைப்பினரும் தொடர்ந்து போராட்டம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் அந்த சாலைகளை சரி செய்யவும் நில ஆக்கிரமிப்பு என்ற பெயரில் கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்தும் மாநகராட்சி நிர்வாகம் ஆளுங்கட்சியினரின் கட்டடங்களை மட்டும் விட்டுவிட்டு ஒருதலைபட்சமாக செயல்படுவதாகவும் கூறி மாநகராட்சி ஆணையாளரை கண்டித்து நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.