கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பொதுமக்கள் அரிசி, காய்கறிகள், மளிகை பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைக்கே தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவின்படி தமிழ்நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்திற்குட்பட்ட பேரூராட்சிகளுக்கு திமுக எம்எல்ஏ ஆஸ்டின் சார்பில் அரிசி, காய்கறிகள், மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்பட்டன.
த்தியாவசிய பொருள்கள் வழங்கும் திமுக எம்எல்ஏ ஆஸ்டின் இந்தப் பொருட்கள் அனைத்தும் விளிம்பு நிலை மக்களுக்கு திமுக பேரூர் தலைவர்கள் மூலம் இன்று முதல் விநியோகிக்கப்பட உள்ளன.
இதையும் படிங்க:கொல்கத்தாவில் மூன்று மருத்துவர்களுக்கு கரோனா!