கன்னியாகுமரி மாவட்டத்தில் தேசிய ஊரடங்கு உத்தரவால் தினக்கூலித் தொழிலாளர்கள், ஏழை, எளிய மக்கள் ஆகியோர் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இவர்கள் தங்களது அன்றாட உணவுக்கும் அத்தியவாசியப் பொருள்களுக்கும் பிறரின் உதவியை நாடி வருகின்றனர்.
இவர்களின் நிலையைக் கருத்தில்கொண்டு மாவட்ட நிர்வாகம், தனியார் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் ஆகியோர் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மாவட்டம் முழுவதும் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் கன்னியாகுமரி தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஆஸ்டின், மருங்கூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட தினக்கூலி தொழிலாளர்களுக்கு அரிசி, காய்கறி, மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை வழங்கினார். இதேபோல, தென்தாமரைகுளத்தில் கரோனா பாதிப்பால் தடை செய்யப்பட்ட பகுதிகளில் வசிக்கும் 169 குடும்பங்களுக்கும் ஆஸ்டின் நிவாரணப் பொருள்களை வழங்கினார்.
இதையும் படிங்க: பெண்ணின் கருப்பையில் பஞ்சு கழிவுகள் - மருத்துவர் மீது கணவன் புகார்!