கன்னியாகுமரி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால், பொதுமக்கள் அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, தினக்கூலி தொழிலாளர்கள், நிறுவனங்களில் பணியாற்றுவோர் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனைப் போக்கும் வகையில் குமரி மாவட்ட நிர்வாகம், நாகர்கோவில் மாநகராட்சி, தனியார் தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் சார்பில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை நிவாரண உதவியாக வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் கன்னியாகுமரி தொகுதி திமுக எம்எல்ஏ ஆஸ்டின் சார்பில், மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.