நாகர்கோவிலில் உள்ள ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சி நடைபெற்றது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து அவர்களுக்கு பதிலளித்தார். அப்போது, திமுக ஆட்சிக்கு வந்ததும், குமரியில் பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் அறிவித்தார்.
மேலும் பேசிய அவர்,”விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அவர்களது பயிர் கடன் ரத்து செய்யப்படும் என நான் அறிவித்ததை பார்த்து, நேற்று எடப்பாடி பழனிசாமியும் அதே அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதே போல் நான் அறிவித்த கூட்டுறவு வங்கியில் 5 பவுன் வரை அடகு வைத்திருப்பதை வட்டியின்றி ரத்து செய்வோம் என்றதையும், விரைவில் பழனிசாமி அறிவிப்பார்.