தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காஞ்சிபுரம் நசரத்பேட்டை காய்கறிச் சந்தையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு! - காஞ்சிபுரம் நசரத்பேட்டை காய்கறி சந்தை

காஞ்சிபுரம்: நசரத்பேட்டையில் செயல்பட்டு வரும் காய்கறிச் சந்தையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

காஞ்சிபுரம் நசரத்பேட்டையில் செயல்பட்டு வரும் காய்கறி சந்தையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
காஞ்சிபுரம் நசரத்பேட்டையில் செயல்பட்டு வரும் காய்கறி சந்தையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

By

Published : Aug 6, 2020, 7:33 PM IST

காஞ்சிபுரம் மையப்பகுதியில் இயங்கி வந்த ராஜாஜி காய்கறிச்சந்தை, கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக, மூன்று மாதங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் ரயில் நிலையம் அருகே வையாவூர் பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டது.

மழையின் காரணத்தால், தற்காலிக காய்கறிச் சந்தைப் பகுதியிலேயே தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறியுள்ளதால், பொது மக்களும் வியாபாரிகளும் அவதிப்பட்டனர். இதன் காரணமாக, காய்கறிச் சந்தை மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவின் பேரில், காஞ்சிபுரம்- வாலாஜாபாத் சாலையில் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் பெருநகராட்சி சார்பில், புதியதாக தற்காலிக காய்கறிச் சந்தை அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா புதிய காய்கறிச் சந்தையில் ஆய்வு மேற்கொண்டு வியாபாரிகள் சங்க நிர்வாகிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

காய்கறிச் சந்தையில் பொதுமக்கள் வந்து செல்லக்கூடிய வகையில் இன்னொரு வழியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று வியாபாரிகள் வைத்த கோரிக்கை மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். ஆய்வின்போது காஞ்சிபுரம் சார் ஆட்சியர் சரவணன், பெரு நகராட்சி ஆணையர் மகேஸ்வரி மற்றும் அரசு அதிகாரிகளும், காய்கறி வியாபார சங்கப் பிரதிநிதிகளும் உடனிருந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details