தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட குமரி ஆட்சியர் - கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை

கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் கடந்த மாதம் கரோனா தடுப்பூசி முகாம் தொடங்கிய நிலையில், இதுவரை 2 ஆயிரத்து 847 நபர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். முகாம் தொடங்கி இருபது நாள்களுக்குப் பிறகு மாவட்ட ஆட்சியர் அரவிந்த் இன்று (பிப்.5) தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

district collector aravindh took covid 19 vaccine
முகாமில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மாவட்ட ஆட்சியர்

By

Published : Feb 5, 2021, 10:23 PM IST

கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கரோனா வைரஸ் தடுப்பூசி மருந்து போடும் பணி கடந்த மாதம் 16ஆம் தேதி தொடங்கியது. குமரி மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பத்மநாபபுரம் அரசு தலைமையிட மருத்துவமனை, செண்பகராமன்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வட்டவிளை அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 4 இடங்களில் தொடக்கத்தில் காரோனா தடுப்பூசி போடப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக மாவட்டம் முழுவதும் 15 இடங்களில் தற்போது காரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் முதல்கட்டமாக 22 ஆயிரத்து 600 தடுப்பூசி மருந்து வழங்கப்பட்டது. இதையடுத்து மாவட்டம் முழுவதுமிருந்து இதுவரை 2 ஆயிரத்து 847 நபர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

காரோனா தடுப்பூசி போட ஆரம்பித்து இருபது நாள்களுக்குப் பிறகு கோட்டார் அடுத்த வடிவீஸ்வரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்த மாவட்ட ஆட்சியர் அரவிந்த், காரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டார்.

வடிவீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆட்சியர்

மாவட்டத்தில் இதுவரை கரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16 ஆயிரத்து 875ஆக உள்ளது. நோய் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 259. தற்போது வரை 104 நபர்கள் தொடர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.

இதையும் படிங்க: நெல்லையப்பர் கோயில் யானைக்கு கரோனா பரிசோதனை!

ABOUT THE AUTHOR

...view details