தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் - மாவட்ட முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பு - Kanyakumari electricity charges Phase Should

கன்னியாகுமரி: மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் அல்லது மின் கட்டணம் செலுத்த ஆறு மாதம் கால அவகாசம் அரசு கொடுக்க வேண்டும் என முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மின்கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்
மின்கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்

By

Published : Apr 25, 2020, 3:04 PM IST

நாடு முழுவதும் ஊரடங்கால் மக்கள் வீடுகளில் முடங்கி வருமானம் இழந்து தவித்து வருகின்றனர். இதேபோல் சிறு, குறு வர்த்தக நிறுவனங்கள் மூடி ஒரு மாதத்திற்கு மேலாகிறது. இந்நிலையில் ஊரடங்கால் வீடுகளில் முடங்கி வருமானம் இழந்துள்ளனர். இந்நிலையில் வீடுகளுக்கும், வர்த்தக நிறுவனங்களும் மே மாதம் 6 தேதிக்குள் மின்சார கட்டணம் கட்ட மின்வாரியம் அறிவித்துள்ளது.

இதற்கு கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக ஜமாத் நிர்வாகிகள் கூட்டம் நாகர்கோவில் இடலாக்குடியில் நடைபெற்றது.

மின்கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்

கூட்டத்திற்கு பின்னர் கூட்டமைப்பின் தலைவர் இமாம் பாதுஷா செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஊரடங்கால் உணவுக்கே வழி இல்லாமல் இருக்கும் நிலையில் மின் கட்டணம் கட்ட சொல்வது பொதுமக்களால் இயலாத நிலையாகும். ஊரடங்கு காலத்தில் மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் அல்லது ஆறு மாதங்களுக்கு அவகாசம் வழங்க வேண்டும்” என்றார்

இதையும் படிங்க: கரோனோ பாதிப்பு: சேலத்தில் 2 பேர் வீடு திரும்பினர்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details