தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குமரி எல்லையில் நுழையும் வாகனங்கள் மீது கிருமிநாசினி தெளிக்கும் பணி - கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பல சரக்கு வாகனங்கள் தொடர்ச்சியாக வந்தபடி உள்ளன

குமரி: வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் மூலம் கரோனா நோய் பரவாமல் இருக்க, மாவட்ட எல்லையில் வாகனங்கள் மீது கிருமிநாசினி தெளிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

மாவட்ட எல்லையில் நுழையும் வாகனங்கள் மீது கிருமிநாசினி தெளிக்கும் பணி தொடங்கியது.
மாவட்ட எல்லையில் நுழையும் வாகனங்கள் மீது கிருமிநாசினி தெளிக்கும் பணி தொடங்கியது.

By

Published : May 1, 2020, 8:58 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்காக, மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொது மக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, காவல் துறையினரால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மாவட்ட நிர்வாகத்தின் இந்தத் தொடர் கண்காணிப்புக் காரணமாக, கடந்த சில நாட்களாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நோய்த்தொற்று வேகமாக குறைந்து வருகிறது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16-லிருந்து 5 ஆக குறைந்துள்ளது.

இந்நிலையில் வெளி மாவட்டங்களிலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பல சரக்கு வாகனங்கள் தொடர்ச்சியாக வந்தபடி உள்ளன. இதனால் வெளி மாவட்டங்களிலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கரோனா நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் மாவட்டத்திற்குள் நுழையும் வாகனங்கள் மீது கிருமி நாசினி தெளிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.

மாவட்ட எல்லையில் நுழையும் வாகனங்கள் மீது கிருமிநாசினி தெளிக்கும் பணி தொடங்கியது.

அதன்படி மாவட்ட எல்லையில் நுழையும் வாகனங்கள் மீது மாநகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்த பின்னரே, நுழைய அனுமதித்து வருகின்றனர். இதனால் கன்னியாகுமரி மாவட்டத்திற்குள் கரோனா தொற்று பரவாமல் இருக்கும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:

இரு மாநில எல்லையில் கரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் ஆய்வு!

ABOUT THE AUTHOR

...view details