கேரளாவில் கரோனாவின் தாக்கம் அதிகமாக பரவி வரும் நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழ்நாடு - கேரளா எல்லையான கொல்லங்கோடு பஞ்சாயத்துக்கு உள்பட, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தானியங்கி இயந்திரம் மூலம் கிருமிநாசினி புகை அடிக்கப்பட்டது.
கரோனா பரவலை தடுக்க கிருமிநாசினி புகை! - கரோனா பரவலை தடுக்க கிருமிநாசினி புகை!
கன்னியாகுமரி: தமிழ்நாடு - கேரளா எல்லைப் பகுதியில் கரோனா பரவலை தடுக்கும் விதமாக காவல் நிலையம், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தானியங்கி இயந்திரம் மூலம் கிருமிநாசினி புகை அடிக்கப்பட்டது.
![கரோனா பரவலை தடுக்க கிருமிநாசினி புகை! Germs killing smoke](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-02:07:53:1602491873-tn-knk-04-germs-killng-smoke-visual-7203868-12102020140328-1210f-1602491608-840.jpg)
Germs killing smoke
அதன்படி, கொல்லங்கோடு காவல் நிலையம், கோயில்கள், பஞ்சாயத்து அலுவலகம் போன்ற பகுதிகளில் ஷிர்தி என்ற தனியார் அமைப்பு சார்பில் தானியங்கி கிருமிநாசினி புகை அடிக்கும் இயந்திரம் மூலம் புகை அடிக்கப்பட்டது.
இதனை குளச்சல் சரக துணை கண்காணிப்பாளர் விஸ்வேஷ் சாஸ்திரி தொடங்கிவைத்தார். மேலும் அரசு அலுவலகங்களில் இலவசமாகவும், தனியார் நிறுவனங்களில் கட்டணத்துடனும் இந்தச் சேவையை செய்ய இருப்பதாக ஷிர்தி அமைப்பினர் கூறியுள்ளனர்.