குமரி:குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளியான வள்ளிநாயகம், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திவருகிறார்.
இது ஆட்சியர் வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வள்ளிநாயகம் பேசியபோது, நகர்ந்து செல்ல முடியாத மாற்றுத்திறனாளிகள் மருத்துவத் தேவைகளுக்கும், உணவு வாங்குவதற்கும் வெளியே செல்ல முடியவில்லை. அப்படியே சென்றாலும், நாங்கள் பயன்படுத்தும் மூன்று சக்கர வாகனம் பழுது ஏற்பட்டுவிடுகிறது.