கரோனா பெருந்தொற்று காரணமாக அனைத்து தரப்பு மக்களும் அச்ச உணர்வுடன் இருந்து வருகின்றனர். எனினும் அத்தியாவசியப் பொருள்கள் மக்களை சென்றடையும் விதமாக, மளிகைப் பொருள்கள், மருத்துவப் பொருள்கள் கொண்டுசெல்ல வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.
இதனால் பல ஊர்களிலிருந்து வரும் வாகனங்கள் குமரி மாவட்டத்தின் முக்கிய நகரங்களிலுள்ள மொத்த விற்பனை கடைகள் நிறைந்த பகுதிகளுக்கு வருகிறது. அதுமட்டுமல்லாமல் பல பகுதிகளிலிருந்து சிறு, குறு, சில்லரை வியாபாரிகள் பொருள்களை எடுத்துச் செல்ல வாகனங்களில் வருகின்றனர். இதனால் வாகன போக்குவரத்து அதிகம் காணப்படும் முக்கிய பகுதியான நாகர்கோவில் அடுத்த கோட்டார் வணிகப் பகுதியில் நாகர்கோவில் மாநாகராட்சி அனுமதியுடன் தனியார் தொண்டுநிறுவனம் சார்பில் லாரி, டெம்போ, உள்பட சரக்கு வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கும் விதமாக தானியங்கி கிருமிநாசினி தெளிக்கும் பாதை அமைக்கப்பட்டுள்ளது.