தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”கன்னியாகுமரி - மும்பை சிஎஸ்எம்டி ரயில் நிலையத்திற்கு இடையே இயக்கப்படும் ஜெயந்தி ஜனதா எக்ஸ்பிரஸ் ரயில் (16382) கன்னியாகுமரியிலிருந்து காலை 6:40 மணிக்குப் புறப்பட்டு மும்பைக்கு மூன்றாவது நாள் காலை 4:40 மணிக்கு சென்றடையும்.
இதேபோன்று மும்பை சிஎஸ்எம்டி - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் (16381) மும்பை சிஎஸ்எம்டி ரயில் நிலையத்திலிருந்து மாலை 3:35 மணிக்குப் புறப்பட்டு மூன்றாவது நாள் நண்பகல் 12:50 மணிக்குக் கன்னியாகுமரி வந்து சேரும்.
ஜெயந்தி ஜனதா எக்ஸ்பிரஸ் ரயிலின் புறப்படும் நேரம் மாற்றம் இந்த அடிப்படையில் தற்போது இந்த ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த ரயில்களின் போக்குவரத்தில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த ரயில்கள் மே மாதம் ஒன்றாம் தேதி முதல் கீழ்க்கண்ட கால அட்டவணையின் படி தனது புதிய பயணத்தைத் தொடங்கும்.
அதன்படி கன்னியாகுமரி - மும்பை சிஎஸ்எம்டி ஜெயந்தி ஜனதா எக்ஸ்பிரஸ் ரயில் (16382) கன்னியாகுமரியிலிருந்து காலை 8:25 மணிக்குப் புறப்படும். இந்த ரயில் மூன்றாவது நாள் காலை 4:35 மணிக்கு மும்பை சென்றடையும். அதேபோல மும்பை சிஎஸ்எம்டி - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் (16381), மும்பை சிஎஸ்எம்டி ரயில் நிலையத்திலிருந்து மாலை 3:35 மணிக்குப் புறப்படும். இந்த ரயில் மூன்றாவது நாள் நண்பகல் 12 மணிக்கு கன்னியாகுமரி வந்து சேரும். இந்த நேர மாற்றம் மே மாதம் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ரயிலின் இணை ரயில் காலதாமதாக வருகிற காரணத்தினால் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : '5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இடைநிற்றலை அதிகரிக்கும்' - ஆதவன் தீட்சண்யா எச்சரிக்கை