தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசியல் அமைப்பு சட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்! - Tamil Nadu Minority People's Welfare Committee

கன்னியாகுமரி: நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் அரசியல் அமைப்பு சட்டத்தினைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கன்னியாகுமரியில் அரசியல் அமைப்பு சட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரியில் அரசியல் அமைப்பு சட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

By

Published : Sep 5, 2020, 3:01 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில், இந்திய தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது, "கரோனாவை காரணம் காட்டி நம்மை எல்லாம் வீட்டிற்குள் பூட்டி வைத்து தேசத்தை கூறு போட்டு விற்பனை செய்து வருகிறது மத்திய அரசு. இதனால் நாட்டு மக்கள் அனைவரும் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். இந்நிலையிலும், பெட்ரோல் விலையை வரலாறு காணாத அளவிற்கு உயர்த்தியுள்ளனர்.

இந்தியாவில் பொதுத்துறை நிறுவனங்களையும், இயற்கை வளங்களையும் ஒட்டுமொத்தமாக இந்திய பன்னாட்டு முதலாளிகளுக்கு வாரி வழங்கி வருகிறது பாஜக அரசு. மேலும், இந்திய தேசத்தில் மக்களின் ஒற்றுமை என்ற கூட்டமைப்பை தகர்த்து நொறுக்கியதோடு, மாநில உரிமைகளை பறிக்கவும் செய்கிறது இந்த மோடியின் ஆட்சி. குறிப்பாக மத சார்பின்மையை காற்றில் பறக்க விடுவதோடு, இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கிய மத சார்பின்மையை, ஜனநாயக கூட்டமைப்பு, சமூகநீதி, தனிநபர் உரிமையை அழிக்கிறது. எனவே, இதை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது” என்று அவர்கள் கூறினர்.

இதையும் படிங்க:அண்ணா, எம்ஜிஆர் தடம்பதித்த வராக நதி: சூளுரைத்த ஓபிஆர்!

ABOUT THE AUTHOR

...view details