கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சாலைகள் மிக மோசமாக உள்ளன. குண்டும் குழியுமாகப் பள்ளங்களுடன் காணப்படும் இந்தச் சாலையில் அடிக்கடி விபத்துகளும் போக்குவரத்து நெரிசல்களும் ஏற்பட்டுவருகின்றன. இந்தச் சாலையைச் சீரமைக்கக்கோரி பல்வேறு தரப்பினர் மாநகராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்திவந்தனர். எனினும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சாலைகளைச் சீரமைக்கக்கோரி திமுகவினர் ஆர்ப்பாட்டம் - திமுகவினர் ஆர்பாட்டம்
கன்னியாகுமரி: நாகர்கோவில் மாநகராட்சிக்குள்பட்ட சாலைகளைச் சீரமைக்காத மாநகராட்சி, நெடுஞ்சாலைத் துறையைக் கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
dmk
இந்த நிலையில், நாகர்கோவில் மாநகர 18ஆவது வட்ட திமுக சார்பில் நாகர்கோவில் மாநகராட்சிக்குள்பட்ட இடலாக்குடி, சந்தி தெரு சாலைகளைச் செப்பனிட மாநகராட்சி, நெடுஞ்சாலைத் துறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக எம்எல்ஏவும் மாவட்டச் செயலாளருமான சுரேஷ் ராஜன் தலைமை தாங்கினார். இதில் ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டு மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து கோஷம் எழுப்பினர்.