தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம் - திருத்தப்பட்ட வேளாண் சட்டங்கள்

கன்னியாகுமரி: மத்திய அரசு புதிதாக கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அனைத்து தொழிற்சங்கங்கள்
அனைத்து தொழிற்சங்கங்கள்

By

Published : Sep 24, 2020, 8:16 AM IST

சிஐடியு, தொ.மு.ச, ஏஐடியுசி, எச்எம்எஸ், ஏஐசிசிடியு, எம்எல்எப், ஐஎன்டியுசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில், நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, மத்திய அரசு புதிதாக கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் திட்டங்களை கைவிட வேண்டும்.

ஊதிய மறுப்பும் ஊதியக் குறைப்பு வேலை மறுப்பு நலவாரிய பதிவு புதுப்பித்தல் புதிய நிபந்தனைகள் உள்ளிட்ட தொழிலாளர் விரோத நடவடிக்கையை கைவிட வேண்டும்.

பொது முடக்கத்தால் வருமானம் இழந்த கட்டுமான, உடலுழைப்பு தொழிலாளர்கள், வருமான வரி செலுத்தும் அளவுக்கு வருவாய் ஈட்டாத அனைத்து குடும்பங்களுக்கும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கு தலா ரூ .7500 வீதம் மூன்று மாதங்களுக்கு ரூ .22, 500 நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

ABOUT THE AUTHOR

...view details