கன்னியாகுமரி:தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க சி.ஐ.டி.யு. பிரிவு கன்னியாகுமரி மாவட்ட ஐந்தாவது மாநாடு நாகர்கோவிலில் இன்று நடைபெற்றது. இதில் இச்சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் திருமதி டெய்சி, உட்பட பல முக்கிய மாநில நிர்வாகிகளும் மாவட்ட நிர்வாகிகளும் அங்கன்வாடி ஊழியர்களும் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் திமுக அரசு அறிவித்த தேர்தல் வாக்குறுதியின்படி அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியராக ஆக்க வேண்டும்; தமிழ்நாடு முழுவதும் 25ஆயிரம் ரூபாய்க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன எனவும்; அதை அரசு நிரப்பாததால் பணியில் இருக்கும் பெண் ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரிப்பதோடு மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்;
உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி உதவியாளர்களுக்கு கிராஜுவெட்டி 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்; சத்துணவு பணியாளர்கள் இறந்தால் பெண் வாரிசுக்கு மட்டும் வேலை; அது ஆண் வாரிசாக இருந்தால் வேலை வழங்கப்படாது என்ற விதியை மாற்றி அனைத்துத்துறைகளிலும் உள்ளது போல ஆண், பெண் என வேறுபாடு பாராமல் வாரிசு வேலை வழங்க வேண்டும்;