தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெற கோரியும், தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிப்பதை கைவிடக்கோரியும் இந்தியா முழுவதும் கண்டன போராட்டம் நடந்துவருகிறது. இதேபோன்று கன்னியாகுமரி மாவட்டத்திலும் பலவேறு கட்சிகள் சமூக நல அமைப்புகள், இஸ்லாமிய அமைப்புகள் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், குமரி மாவட்டம் திட்டுவிளையில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் ஹெச்.வசந்தகுமார் தலைமை தாங்கினார்.