தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குமரியில் தந்தை உயிரிழந்த துக்கம் தாங்காமல் மகள் தற்கொலை - தந்தை இறந்த துக்கம் தாங்காமல் மகள் தற்கொலை

கன்னியாகுமரி: தந்தை உயிரிழந்த துக்கம் தாங்காமல் இளம்பெண் தற்கொலையால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை
தற்கொலை

By

Published : Jan 3, 2021, 1:40 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே சமத்துவபுரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி விஜயகுமார். இவரது மகள் உமாமகேஷ்வரி (19). உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவர், கடந்த 41 நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். தந்தையின் பிரிவால் மன வேதனையில் இருந்த உமாமகேஷ்வரி, தொடர்ந்து அழுதுகொண்டே இருந்திருக்கிறார்.

போராட்டத்துடன் வாழ்தலே தீர்வு

உறவினர்களும் அக்கம்பக்கத்தினரும் தொடர்ந்து ஆறுதல் கூறினர். இந்நிலையில் இன்று (ஜன.3) விஜயகுமாருக்கு 41ஆவது நாள் சடங்குகள் செய்ய இருந்த நிலையில், தந்தை இறந்த துக்கம் தாங்காமல் உமாமகேஷ்வரி தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து உயிரிழந்தார். தந்தையின் மீதிருந்த அலாதி பிரியத்தால் மகளும் தற்கொலையால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:திருவாரூரில் இறந்தவர்களின் உடலை சுமந்து செல்லும் அவலம்: சுடுகாட்டிற்கு சாலைகோரும் கிராம மக்கள்!

ABOUT THE AUTHOR

...view details