தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குமரியில் பாசனத்திற்காக அணைகள் திறப்பு! - Kumari District News

கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தின் முக்கிய நீராதாரமான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகள் பாசனத்திற்காக திறக்கப்பட்டன.

பாசனத்திற்காக அணைகள் திறப்பு
பாசனத்திற்காக அணைகள் திறப்பு

By

Published : Jun 9, 2020, 4:22 AM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயத்திற்கு நீராதாரமாக விளங்குவது பேச்சிப்பாறை அணை. கன்னியாகுமரி மாவட்டம் மட்டுல்லாது, நெல்லை மாவட்டத்தின் ராதாபுரம் தாலுகா பகுதிவரை விவசாயத்திற்கு பயன்படுகிறது.

இந்நிலையில் கன்னியாகுமரியில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக, அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் மாவட்டத்திலுள்ள அணைகளில் விவசாயத்திற்கு தண்ணீர் திறந்துவிடக்கோரி விவசாயிகள் கோரிக்கை வைத்து வந்தனர்.

குமரியில் அணை திறக்கும் காணொலி
அதனடிப்படையில் விவசாயிகளின் கோரிக்கை ஏற்று, கோதையாறு மற்றும் பட்டினங்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டார். இதனையடுத்து 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையிலிருந்து விவசாய தேவைக்காக 850 கன அடி தண்ணீர் இன்று திறக்கப்பட்டது.மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் முன்னிலையில், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் மதகுகளை திறந்து வைத்தார். இதில் சட்டமன்ற உறுப்பினர் மனோ தங்கராஜ், விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முன்னதாக அணை அடிவாரத்தில் உள்ள பேச்சியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அதுபோல வரும் ஜனவரி மாதம் 28ஆம் தேதிவரை தண்ணீர் திறந்து விடப்படும். இதனால் 79 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் மற்றும் 2040 குளங்கள் பயனடையும். இதை தொடர்ந்து பெருஞ்சாணி, சிற்றார் உள்ளிட்ட அணைகளிலும் விவசாயத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது .

இதையும் படிங்க:கொடுமணல் அகழாய்வு - பளிங்கு கற்கள், எலும்புகள், சுடுமண் பொருட்கள் கண்டெடுப்பு!

ABOUT THE AUTHOR

...view details