தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுரேஷ் குமார் கொலை வழக்கு - உடற்கூராய்வு அறிக்கையை வழங்க உத்தரவு

கன்னியாகுமரியைச் சேர்ந்த சுரேஷ் குமார் ஆணவக் கொலை செய்ததாக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையில், உடற்கூராய்வு அறிக்கையை மனுதாரர் தரப்புக்கு வழங்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை
உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை

By

Published : Nov 15, 2021, 9:13 PM IST

மதுரை:கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை புதூரைச் சேர்ந்தவர் சுமன் ஆனந்த். இவர் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “எனது சகோதரர் சுரேஷ்குமார், கூலி வேலை பார்த்து வந்தார்.

அவர் ஆரல்வாய்மொழி கல்லூரியில் படிக்கும்போது, அவரும் அவருடன் படித்த காட்டுப்புதூரைச் சேர்ந்த தங்கநீலாவும் 8 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். நாங்கள் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர்கள். அப்பெண் வேறு வகுப்பைச் சேர்ந்தவர். இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர்.

இந்நிலையில் சுரேஷ்குமார் மீது பூதப்பாண்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப்புகார் தொடர்பான விசாரணைக்காக சுரேஷ்குமாரை காவல் துறையினர் அழைத்தனர்.

வழக்கு தள்ளி வைப்பு

பூதப்பாண்டி காவல் நிலையம் செல்வதாக கூறிச்சென்ற சுரேஷ்குமார் காவல் நிலையம் செல்லவில்லை. அவர் காட்டுப்புதூர் ஆலடி சிவன் கோயில் தெப்பக்குளம் அருகே இறந்து கிடந்தார். அவரை கொலை செய்துள்ளனர்.

ஆனால் காவல் துறையினர் அவர் தற்கொலை செய்துகொண்டதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனவே, சுரேஷ்குமார் உடலை மருத்துவ வல்லுனர் குழு அமைத்து மறு உடற்கூராய்வு செய்யவும், மரணம் தொடர்பாக பூதப்பாண்டி காவல் துறையினர் பதிவு செய்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியும் உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு இன்று (நவ.15) நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சுரேஷ்குமாரின் உடலின் உடற்கூராய்வு செய்த அறிக்கையை மனுதாரர் தரப்புக்கு வழங்க உத்தரவிட்டு, விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்தார்.

இதையும் படிங்க:Defamation case - நீதிமன்றத்தில் ஆஜரான ஹெச்.ராஜா

ABOUT THE AUTHOR

...view details