கன்னியாகுமரி மாவட்ட அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் தலித் தொழிலாளர்கள் மீது சாதி ரீதியாக துன்புறுத்தி வருவதாக மேலாளர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து அரசு போக்குவரத்து கழக மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புகார் கொடுக்கப்பட்டது.
இருப்பினும் இதுவரை அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் குமரி மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு போக்குவரத்து பணிமனை உள்பட 30 இடங்களில் மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.