தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சட்டவிரோதம்: குடோனிலிருந்து எரிவாயு உருளைகள் பறிமுதல்! - unofficial Cylinder godown sealed

கன்னியாகுமரி: ஆரல்வாய்மொழி அருகே சட்டவிரோதமாகச் செயல்பட்டுவந்த சமையல் எரிவாயு உருளை குடோனிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட எரிவாயு உருளைகளைக் காவல் துறையினர் கைப்பற்றினர்.

சட்டவிரோதமாக செயல்பட்டுவந்த சமையல் சிலிண்டர் குடோனிலிருந்து சிலிண்டர்கள் பறிமுதல்!
சட்டவிரோதமாக செயல்பட்டுவந்த சமையல் சிலிண்டர் குடோனிலிருந்து சிலிண்டர்கள் பறிமுதல்!

By

Published : Jun 17, 2020, 7:54 AM IST

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியில் விஜயகுமார் என்பவருக்குச் சொந்தமான தனியார் சமையல் எரிவாயு உருளை நிறுவனம் செயல்பட்டுவருகிறது. விஜயகுமார் முகவாண்மைக்காக (ஏஜென்சி) மூவேந்தர் நகர் பகுதியில் அரசு சட்ட விதிமுறைகளை மீறி சாதரண ஆஸ்பெட்டாஸ் மூலமாக கூரை அமைத்து எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாமல் சமையல் எரிவாயு உருளை குடோனை அமைத்துள்ளதாக ஆரல்வாய்மொழி காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், சட்டவிரோதமாகச் செயல்பட்டுவந்த எரிவாயு உருளை குடோனைக் கண்டறிந்து அங்கிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட சமையல் எரிவாயு உருளைகளைக் கைப்பற்றினர்.

மேலும் இது குறித்து சமையல் எரிவாயு உருளை குடோன் உரிமையாளர் விஜயகுமாரிடம் விசாரணை நடத்திவருகின்றனர். இதேபோன்று மாவட்டத்தில் உள்ள குடோன்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க...தாராவியில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட கரோனா: எப்படி சாத்தியமானது?

ABOUT THE AUTHOR

...view details