தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கலாசாரம் குறித்து குமரி முதல் காஷ்மீர் வரை சைக்கிள் பயணம் - கன்னியாகுமரியில் கலாசாரம் குறித்து சைக்கிள் பயணம்

கன்னியாகுமரி: கலாசாரம், உடற்பயிற்சி, ஆரோக்கியம் தொடர்பாக காஷ்மீர் முதல் குமரி வரை சைக்கிளில் விழிப்புணர்வு மேற்கொண்ட இளைஞருக்கு உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Cycle campaign
Cycle campaign

By

Published : Jan 28, 2020, 12:09 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் சிதறாலையைச் சேர்ந்தவர் ஸ்ரீ தஜ் விஜயன் (31). முதுகலை பட்டதாரியான இவர், நாகர்கோவிலில் சுய தொழில் செய்துவருகிறார். இந்நிலையில் நம் தேசத்தின் உணவு, கலாசாரம் ஆகியவற்றின் பன்முகத்தன்மையை சீர்படுத்தவும், உடற்பயிற்சி, ஆரோக்கியம் தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான நான்காயிரம் கி.மீ. தூரம் சைக்கிளில் பயணம் மேற்கொண்டார்.

Cycle campaign

டிசம்பர் 19ஆம் தேதி தொடங்கிய இந்தச் சாதனை பயணத்தை கன்னியாகுமரியில் இன்று நிறைவுசெய்த விஜயனுக்கு பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோர் உற்சாகமாக வரவேற்று பூச்செண்டு கொடுத்தும் இனிப்புகள் வழங்கியும் வாழ்த்துத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: அக்குபஞ்சர் மருத்துவர்களுக்கு அங்கீகாரம் கோரி பேரணி!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details