கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக கனமழை பெய்துவருகிறது. மாவட்டத்தில் அதிகபட்சமாக நேற்று பாலமோர் மற்றும் கோழிப்போர்விளையில் தலா 8.5 செ.மீ. மழையும், புத்தன்அணை மற்றும் சுருளோடு பகுதிகளில் தலா 8 செ.மீ மழையும் பதிவானது.
கனமழையால் தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்கள் - விவசாயிகள் வேதனை - விவசாயிகள் பாதிப்பு
கன்னியாகுமரி: கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் தோவாளை தாலுகா பகுதிகளில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
crops
இந்த கனமழை காரணமாக பழையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தோவாளை தாலுகாவிற்குட்பட்ட தெள்ளாந்தி கடுக்கரை காட்டுப்புதூர் பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் நீரில் முழ்கியுள்ளது. அதே போன்று விவசாய நிலங்களுக்கு செல்லும் வழியில் நீர் ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் அக்கரைக்கு செல்லமுடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.