திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாநிலம் தழுவிய கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்கள் மண்டல அளவிலான போட்டியில் கலந்து கொள்வார்கள்.
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் திமுக தலைவர் தங்க கோப்பைக்கான மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நாகர்கோவில் கன்கார்டியா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சிவராஜ் தலைமையில் நடந்த போட்டியை மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் அறுபது அணிகள் கலந்து கொண்டன.