தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பார்வையற்ற பெண்களுக்கான கிரிக்கெட் போட்டி!

கன்னியாகுமரி: நாகர்கோவிலில் பார்வையற்றவர்களுக்கான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது. பந்தின் அசைவு சத்தத்தை வைத்து வித்தியாசமான முறையில் நடந்த இப்போட்டியில் பல மாநிலங்களிலிருந்து 42 மாணவிகள் கலந்துகொண்டனர்.

கன்னியாகுமரி
பார்வையற்ற பெண்களுக்கான கிரிக்கெட் போட்டி

By

Published : Mar 20, 2021, 7:42 PM IST

தமிழ்நாடு பார்வையற்றோருக்கான கிரிக்கெட் சங்கமும், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பொன்ஜெஸ்லி கல்லூரியும் இணைந்து பார்வையற்றோர் பெண்களுக்கான கிரிக்கெட் போட்டியை இன்று (மார்ச்.20) நடத்தினர்.

பார்வையற்ற பெண்களுக்கான கிரிக்கெட் போட்டி

இக்கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியில் பல மாநிலங்களிலிருந்து 42 மாணவிகள் பங்கேற்றனர். பார்வையற்றோர், லேசான பார்க்கும் திறன் உள்ளவர்கள் மற்றும் ஓரளவுக்கு பார்வை உள்ளவர்கள் என மூன்று பிரிவுகளாக இந்தப் போட்டிகள் நடைபெற்றன.

இக்கிரிக்கெட் பந்து ஒருவித சலங்கை ஒலி எழுப்பும் விதமான பந்து என்பதால், அந்த சத்தத்தை வைத்து கணித்து கிரிக்கெட் விளையாடியது பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.

இதையும் படிங்க: ஸ்டாலினால், என்னை நினைக்காமல் இருக்க முடியாது : அமைச்சரின் விளக்கம்

ABOUT THE AUTHOR

...view details