கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நகரில், சாலைகள் குண்டும் குழியுமாக, வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளதால், பொதுமக்கள் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகி வருவதோடு, விபத்துகளும் அடிக்கடி ஏற்பட்டுவருகின்றன.
சாலைகளை சீரமைக்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நாற்று நடும் போராட்டம்! - கன்னியாகுமரி செய்திகள்
கன்னியாகுமரி: நாகர்கோவிலில், குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி, நாற்று நடும் போராட்டம் நடத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
இதனால் இந்த சாலைகளை சீரமைக்கக் கோரி, பல்வேறு போராட்டங்களை பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் நடத்தியுள்ளபோதிலும் இதுவரையிலும் மாநகராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, இதனைக் கண்டித்தும் உடனடியாக சாலைகளை சீரமைக்கக் கோரியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நாகர்கோவில், கீழத்தெரு சந்திப்பின் சாலையில் நாற்று நடும் போராட்டத்தை இன்று நடத்தினர். தங்கள் கட்சிக் கொடியுடன் வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், சாலையில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டவாறு, சாலைகளை சீரமைக்கக் கோரி கோஷங்களையும் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் அவர்களை கைது செய்தனர்.